முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி, கையூட்டல் வழங்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கையூட்டல் வழங்க முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தமது கணவருக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், அவருக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை வழங்குமாறு நீதிபதியைத் தூண்டும் நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மேல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவருக்கு கையூட்டல் வழங்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



