நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று முன்னிலையாக வேண்டியிருந்த ஷிராந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டில் இருப்பதால் மற்றொரு திகதியை கோரியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர், இது தொடர்பாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக அவர் தற்போது வெளிநாடு சென்றுள்ளதாகவும், இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் FCID முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், நாடு திரும்பிய பின்னர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் நேரில் முன்னிலையாகி தேவையான வாக்குமூலத்தை வழங்குவதற்கு அவர் தயாராக இருப்பதாகவும் சட்டத்தரணி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிலிய சவிய நிதியத்துடன் தொடர்புடைய கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகள் தொடர்பில் தகவல்களைப் பெறுவதற்காக ஷிராந்தி ராஜபக்ஷவை நேற்று 24ஆம் திகதி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவர் வெளிநாட்டில் இருப்பதாகத் தெரிவித்து, விசாரணைக்காக முன்னிலையாகும் திகதியை மாற்றித் தருமாறு தற்போது கோரிக்கை விடுத்துள்ளார்.



