யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொட்டடி பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார், சிறுவனின் சடலத்தை மீட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




