அச்சுவேலி சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் – 4 பேர் கைது

அச்சுவேலி சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் – 4 பேர் கைது

யாழ்ப்பாணம் அச்சுவேலி சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்கள் தாக்கப்படும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக நான்கு சிறுவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில், சீர்திருத்தப் பள்ளியில் சில சிறுவர்கள் தாக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சிகள் பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, உண்மை நிலை வெளிக்கொணரப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், காணொளியில் இடம்பெறும் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணையின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு சிறுவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சிறுவர்களிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர், கைது செய்யப்பட்ட சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள காணொளியில் காணப்படும் உத்தியோகத்தர் குறித்த சீர்திருத்தப் பள்ளியில் கடமையாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *